Mi Note 4

Wednesday, October 24, 2012

நீர்-இனி போர்: எதிரியாக மாறுமா எதிர்காலம்
தினமலர்

பணத்தை தண்ணியா செலவழிக்கிறான்' என பழமொழி சொல்லப்போய், "தண்ணியை பணத்தைப் போல செலவழிக்கிறான்' என சொல்லும் காலம் நெருங்கி வருகிறது.

மண்ணுக்காக நாடுகள் முட்டிக்கொண்டதால் தான் இரண்டு உலகப் போர்கள் நடந்தன. எதிர்காலத்தில் இன்னொரு உலகப் போர் நடந்தால், அது நீருக்காக மட்டுமே நடக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.இதற்கு காரணம், மாறி வரும் சுற்றுச்சூழ்நிலைகளால், நீர் என்பதே அரிதாகி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. செயற்கையாக நீரை தயாரிக்கலாம் என்றால், அது எளிதில் சாத்தியமாகாது. எனவே, இயற்கையாக கிடைக்கும் நீரை கைப்பற்ற, உலக நாடுகள் போட்டி போடும். தண்ணீர் இல்லாவிட்டால், வாழ்க்கையே இல்லை என்பதால், உலக நாடுகள், உச்சகட்டத்தில் மோதிக்கொள்ளும்.

பருவநிலை மாற்றம்:


பருவநிலை மாற்றத்தால், அதிக மழை அல்லது அதிக வெப்பம் என்ற நிலைமை ஏற்படுகிறது. சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் மக்கள் தொகை பெருக்கம், காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம் ஆகியவை. தேவையை உணர்ந்து செயல்படாவிட்டால், 2015லேயே தண்ணீர் தேவை அதிகரித்து, உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை உயரும். 
பூமி, 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29 சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த தண்ணீரில் உப்பு நீரே அதிகம். 2.5 சதவீதம் நீர் மட்டுமே நல்லநீர். உலகில், 0.08 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50 நாடுகளை 1999ல் ஐ.நா., அறிவித்தது. தற்போது விவசாயத்திற்காக 70 சதவீத நீர் பயன்படுத்தப்படுகிறது. இது 2020ல் 87 சதவீதம் ஆகும் என, உலக தண்ணீர் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஐந்து வயது பூர்த்தியடையாத, 30 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பசி, தொற்று நோய்களால் இறக்கின்றனர். சுத்தமான குடிநீர், நல்ல சுகாதாரம், சரிவிகித உணவு போன்றவற்றின் மூலமே இதை சரி செய்ய முடியும். 

என்ன தீர்வு:


அனைத்து ஆதாரங்களுக்கும், அடிப்படையான தண்ணீரை பாதுகாப்பது நமது கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். சொட்டு நீர் பாசனம், நீர்தெளிப்பு போன்ற வற்றை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்கலாம். 

"மடி'யில் கை வைத்த கதை:


பற்றாகுறை ஏற்பட்டதும், "மடி'யில் கை வைத்த கதையாக, நிலத்தடியில் கை வைத்தோம். அந்த நீரையும் எக்கச்சக்கமாக உறிஞ்சிகிறோம். இது இன்னொரு ஆபத்து. இதனால், அந்த இடத்தின் இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கிணறுகள் வற்றி, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படுகிறது.

நீரின் தேவை:


விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத் தான் மற்ற உபயோகங்களுக்கு தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை பயன்படுத்தினோம். இது 1980ல், 45 சதவீதமாகவும், 1990ல் 65 சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை, மொத்த நீரில் 80 சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால், நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது. நீர் இல்லாவிடில், உலகம் அழிந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.
மாசுபடுத்தும் காரணங்கள்:நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள் தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், வேதிப்பொருட்கள், ஆயில், பெயின்ட் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கை தன்மையே மாறுகிறது. வீட்டு கழிப்பறை, சாக்கடை ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் நிலத்தடி நீர் குடிநீராகவும்,60 சதவீத நிலத்தடி நீர், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.

செயற்கை நீர் சாத்தியமா:


செயற்கையாக நீரை உருவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்களை கேட்டால், முடியாது என்றே பதில் அளிக்கின்றனர். இருப்பினும், ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக்கூடியவை தான். ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடிவதில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது. ஆக்ஸிஜன், இரட்டை அணுவாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் பிரித்தெடுத்தால், இரண்டும் நிலையான எலக்ட்ரான்களை கொண்டிருக்கும். ஒரே அளவு எலக்ட்ரான்கள் கொண்டவை, எதனுடனும் வினை புரியாது. மீறி இணைத்தால், தண்ணீருடன் சேர்ந்து அதிகமான சக்தி வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (பியூஷன்).செயற்கையாக நீரை உருவாக்குவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்வடைந்து மழைநீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த நீரை அலட்சியமாக வீணாக்குகிறோம். 

Tuesday, April 17, 2012

மூலிகை விவசாயம்

நன்றி: பசுமை முத்து [ copied from pasumai muthu blog]

" ஆவாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ" - ஆவாரை செடியை மருந்துக்கு பயன்படுத்தினால் இறப்பு கூட பக்கத்தில் வராது என்பது தான் இதற்கு பொருள். தமிழ்நாட்டில் நீங்கள் எங்கு பயணம் செய்யும் போதும் இந்த ஆவாரை மஞ்சள் நிறத்தில் பூக்களுடம் சாலையின் ஒரங்களில் எங்கும் வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இப்படி வளர்ந்து கிடக்கும் செடியை பறித்து பணம் பார்க்க தான் யாரும் முன்வருவதில்லை.

இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை பெண்களின் அழகை மேம்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டும் இயற்கை கிரீம்களில் இந்த ஆவரை சேர்க்கப்படுகிறது. ஆவாரையை பொடியாக்கி தேய்த்து குளித்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும் என்கிறது சித்த நூல்கள்.

இது போல் தமிழ்நாட்டில் சாலை ஓரங்களிலும், வயல்வரப்புகளிலும் மருத்துவ குணமுடைய ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தும் இயற்கையாகவே சிறந்த மண்வளம் மற்றும் தட்பவெப்ப நிலையை கொண்டிருக்கிறது. இப்படியிருந்தும் உலக அளவில் இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி வணிகம் என்பது 1 சதவீதத்திற்கும் கீழ்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகின் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்துக் கொள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளையே நாடுவதாக கூறுகிறது. வளர்க்க வளர்க்க பணத்தை, டாலர்களை அள்ளித்தரும் ஒரே வளம் மூலிகைகள் மட்டுமே.

இந்தியாவிலும் கடந்த 10-15 ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகள் நன்றாக வளரத் தொடங்கியுள்ளது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருந்து தயாரிப்புக்கான மூலிகைகளின் தேவை பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசு, மூலிகை தொடர்பான தொழில்களில் ஈடுபட விரும்புபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக, தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் என்று ஒரு வாரியத்தை உருவாக்கியுள்ளது. மத்திய அரசு உருவாக்கிய இந்த வாரியத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மருத்துவ தாவர வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறது.

மருத்துவ தாவரங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பது, பாரம்பரிய மருத்துவ துறையை வளர்க்க தேவையான கொள்கைகளை உருவாக்குவது, பணம் ஈட்டக்கூடிய தாவரங்களை பயிரிடுதல், முறையான அறுவடை செய்தல், ஆய்வு மற்றும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது, பதப்படுத்துதல், மூலப்பொருட்களை உருவாக்குதல், சந்தை நிலவரம் உள்பட பல தகவல்களை மூலிகை பயிரிடுவோருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் எடுத்து சொல்வது தான் இந்த வாரியத்தின் வேலை.

இந்த வாரியம் மூலிகை பயிரிட விரும்புபவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இதனை தெரிந்து கொண்டவர்கள் சிறிய அளவில் நிலம் இருந்தால் கூட அதிக அளவு டாலர்களை மூலிகைகளை விற்பனை செய்வதன் மூலம் பெற முடியும். எனவே இந்த பதிவை பதிக்கும் படிக்கும் பதிவர்களுக்கு வசதியாக தமிழ்நாட்டின் எந்த மாநிலத்தில் என்ன மாதிரியான மூலிகைகள் நன்றாக வளரும் என்ற பட்டியலையும் இங்கு கொடுத்துள்ளேன்.

இந்த தாவரங்களை பயிரிட விரும்பும் விவசாயிகள், பயிர் செய்யவுள்ள மூலிகை, எத்தனை ஏக்கர் பரப்பில பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது, அதற்காக தேவைப்படும் நிதி அளவு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சென்னையில் இயங்கும் மாநில மருத்துவ தாவர வாரியத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட திட்ட அறிக்கை தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு சிறந்த திட்ட அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு தகுந்த மானியம் வழங்கப்படும். இந்த மானியம் விண்ணப்பதாரருக்கு இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வழங்கப்படும்.

மூலிகை தாவரங்களை பயிரிடும் விவசாயிகள் அவற்றை நல்ல லாபத்தில் உள்ளூரில் விற்க தேவையான நடவடிக்கைகளை வாரியம் செய்துள்ளது. இதன்படி மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முகவரிகள், மூலிகைகளை வாங்குவோர் பற்றிய தகவல்களையும் அளித்துள்ளது.

எனவே உங்கள் நிலமும் மூலிகை தாவரங்களை வளர்க்க ஏதுவானதாக இருந்தால் உடனே வர்த்தகரீதியாக லாபம் தரக்கூடிய மூலிகைகளை பயிரிட்டு பலன் பெறலாம். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்புபவர்கள்


மாநில மருத்துவ தாவரங்கள் வாரியம்,
அரும்பாக்கம், சென்னை-06.
தொலைபேசி எண்: 044-2622 2565/ 2621 4844 / 2628 1563 யில் தொடர்பு கொள்ளலாம்.


எந்த மாவட்டத்தில் என்ன மூலிகை வளரும்?

தற்போது தேசிய மருத்துவதாவர வாரியம் உலகின் மூலிகை தேவையை கருத்தில் கொண்டு 2011-12ல் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் எக்டர் பரப்பளவில் மூலிகை சாகுபடியை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 200 வகையான விதை மற்றும் கன்றுகளுடன் கூடிய தரம் வாய்ந்த பயிர்த் தோட்டங்களை அமைப்பது, மருந்து தர நிர்ணய ஆய்வகங்கள் நிறுவுவது உள்பட பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது. எனவே கீழ்க்கண்ட மாவட்டங்களில் சில மூலிகைகள் நன்றாக வளர வாய்ப்புள்ளன. இதனை பயன்படுத்தி மருத்துவ தாவரங்களை பயிரிட்டு பணம் காணலாம்.

சித்தாமுட்டி-(தமிழகத்தின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகள்)
பாரிசவாதம், பக்கவாதம், முகவாதம் போன்ற கடும் வாத நோய்களை தீர்க்க உதவும் சித்தாமுட்டி 1000 மெட்ரிக் டன் அளவு தேவைப்படுகிறது. இதனை தமிழ்நாட்டின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகளிலும் பயிரிடலாம்.

கலப்பைக் கிழங்கு -( சேலம், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி )

மருந்து கூர்க்கன் (திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயமுத்தூர்)

அமுக்கரா -( கம்பம், கொல்லிமலை, ஏற்காடு, ஓசூர்)

தாட்டுபூட்டு பூ- (சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி)

கடல் அழிஞ்சில் (வேதாரணியம், கோடியக்கரை, கன்னியாகுமரி)

நுணா -(ஈரோடு, கோயமுத்தூர், திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலைகளான தேனி, பெரியகுளம். உடலின்நாடி நடையை உயர்த்த உதவும் நுணாவிற்கு 1000 மெட்ரிக் டன் தேவை உள்ளது.


கள்ளி முளையான் -(திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி)
சக்கரைக் கொல்லி -(திண்டுக்கல், தேனி, பெரியகுளம், திருநெல்வேலி)

திப்பிலி -(கொல்லிமலை, பழனிமலை, கன்னியாகுமரி, குளிர்ந்த பகுதிகளான ஓசூர், பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர்)

அசோகா -(மேற்கு தொடர்ச்சி மலையின் பின்பகுதி)
கருச்சிதைவு, கர்ப்பசூலை உள்ளிட்ட பெண்களின் நோய்களுக்கு அருமருந்தாகும் இதன் ஆண்டு தேவை 100 மெட்ரிக் டன்கள்

மாகாலி வேர்- (தென்மலை, ஜவ்வாது மலை முழுவதும்)

பாலைக்கீரை -(திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்)

நிலவேம்பு -( ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கடலூர்)

இசப்பு கோல் -( இராமநாதபுரம், விருதுநகர்)

மேலும் வல்லாரை, மணத்தக்காளி, நெல்லி, நிலாவரை, நிலப்பணைக்கிழங்கு, சிறுகுறிஞ்சான், கறிவேப்பிலை, கீழாநெல்லி, கருந்துளசி, வசம்பு, சித்தரத்தை, ஆடாதோடை, அதிவிடயம், பச்சைநாபி, சோற்றுக்கற்றாழை போன்றவையும் மருத்துவ தேவைக்காக உலக அளவில் 500 முதல் 1000 மெட்ரிக் டன்கள் அளவு வரை தேவைப்படுகிறது. எனவே மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தகுந்த மூலிகைகளை பயிரிட்டால் கை மேல் காசு நிச்சயம்.

Sunday, January 22, 2012

நாட்டு கோழி குஞ்சுகள்

நாட்டு கோழி பண்ணை அமைக்க விரும்புவோர் , நாட்டு கோழி குஞ்சுகள் கிடைக்கும் இடம் பற்றிய தகவல் பெற நண்பர் நாகேந்தரனை தொடர்பு கொள்ளலாம்... நாட்டு மற்றும் ப்ராய்லர் கோழிகளை பற்றிய அனைத்து விதமான ஆலோசனைகளும் இவரிடம் பெறலாம் .


mobile : +91 9920385514

Saturday, January 7, 2012

விவசாய பொருள்கள் ஏற்றுமதி செய்ய

விவசாய பொருள்கள் ஏற்றுமதி செய்ய உதவி பெற தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் இல்லை,தமிழ்நாட்டில் உள்ள மக்கள் உதவி பெற விரும்பினால் கர்நாடக அமைப்பை தான் நாட வேண்டும்.பின் வரும் முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Agricultural and Processed Food Products Export Development Authority (APEDA)
12/1/1 Palace Cross Road Bangalore 560 020
Phone: 080-23343425/2336827
Fax: 080-23364560
E-Mail: apedablr@vsnl.net
Contact Person: Mr. R Ravindra
Designation: Regional Incharge
City: Banglore
Pin Code: 560020
State: Karnataka
Country: India

Friday, January 6, 2012

ஈமு

mail from one of our blog follower:

அனைவருக்கும் வணக்கம்
என் பெயர் கவிதா நான் திருவண்ணமலை நான் எனது வீட்டில் 20 ஈமு பறவைகள் வைத்துள்ளேன்.
தயவு செய்து ஒப்பந்த அடிப்படையில் ஈமு வளர்ப்பை தவிர்த்து விடவும் ,முன்பைவிட நல்ல முன்னேற்றம் நம் தமிழ் நட்டில் ஈமு வின் தேவை அதிகறித்து விட்டது ஆனால் அந்த அளவிற்கு உற்பத்தி இல்லை சுசி ஈமு நிறுவனத்திலும் அதே நிலை 500 பேருக்கு கொடுக்கும் அளவில் பறவைகளை வைத்துக்கொண்டு பல ஆயிரம்பேரிடம் பணம் பெற்றுள்ளனர் தயவு செய்து அப்படி யாரும் ஏமாற வேண்டாம் வெளியில் விசாரித்து வாங்குங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து தகவலும் நான் தருகின்றேன் நீங்கள் சொந்தமாக பண்ணை அமைக்க +91-9445111866

Friday, December 2, 2011

இந்தியா:- இனி கூலித் தொழிலாளர்கள் கூட்டம்

நன்றி: ஆனந்த விகடன்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சந்தைகளில் ஒன்று... மதுக்கூர் சந்தை. ஒரு குடும்பத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். சாமான்கள் மிகத் தரமாக வும் விலை வெகு மலிவாகவும் இருக்கும். மதுக்கூர் சந்தையின் முக்கியமான அம்சம், கருவாடும் நல்லெண்ணெயும். ''அட... அந்த நல்லெண்ணெயும் கருவாடும் கூடிக் குழம்புக்குக் கொடுக்கும் ருசியே தனி'' என்பார்கள். தமிழ்நாட்டில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், கொல்லிமலை, பொள்ளாச்சி, வால்பாறை, தேனி, பாவூர்சத்திரம் என்று ஒவ்வொரு பகுதிக் கும் இப்படி ஒவ்வொரு சந்தையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சந்தை மரபு இன்று, நேற்றல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடர்வது.
பண்டைய தமிழக அரசர்கள் பத்துப் பதினைந்து கிராமங்களுக்கு மையமாக ஓர் ஊரைத் தேர்ந்தெடுத்து பெரிய கோயில்களைக் கட்டினார்கள். எங்கெல்லாம் இப்படிப் பெரிய கோயில்களைக் கட்டினார்களோ, அங்கெல்லாம் அருகிலேயே சந்தைகளை அமைத்தார் கள். திருவிழாக்கள், அதையட்டிப் போடப்படும் திருவிழாக் கடைகள்... எல்லாமே சந்தை என்கிற அமைப்பை மக்களின் வாழ்வோடு பிணைக்கும் அம்சங்கள். தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுக்க இந்த மரபு இருக்கிறது. இந்த மரபின் நீட்சியே இன்றைய கோயம்பேடு சந்தை முதல் தெருவோர மளிகைக் கடைகள் வரை.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்றால், இந்திய விவசாயத்தின் முதுகெலும்பு சில்லறை வர்த்தகம் என்று அழைக்கப்படும் இந்தச் சந்தை முறை. இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிகமானோருக்கு - 5 கோடி பேருக்கு-வேலை அளிக்கும் துறை இது. இந்தியாவின் 6.58 லட்சம் கிராமங்களை 47 ஆயிரம் சந்தைகள் இணைக்கின்றன. நம்முடைய தானிய உற்பத்தியில் 35 சதவிகிதம் நேரடியாகவும் 41 சதவிகிதம் மறைமுகமாகவும், இந்தச் சந்தை அமைப்பின் மூலமாகவே விநியோகிக்கப்படுகிறது.
இந்திய விவசாயத் துறைக்கும் இந்திய சில்லறை வர்த்தகத் துறைக்கும் இதுவரை துரும்பைக்கூட கிள்ளிப்போடாத மன்மோகன் சிங் அரசு, கடந்த வாரம் இரு துறைகளையும் மொத்தமாக விலை பேசும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கெனவே, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பல பொருள் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கும் ஒரு பொருள் சில்லறை வர்த்தகத்தில் 100 சதவிகிதம் அந்நிய முதலீட்டுக்கும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. சுருக்கமாக, இந்திய வேளாண் துறையையும் சில்லறை வர்த்தகத்தையும் வளைத்துப் போட்டுக்கொள்ள வெளிநாட்டுப் பெருநிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. மக்களிடம் இருந்து பெரிய எதிர்ப்பு ஏற்படாத நிலையில், எதிர்க் கட்சிகள், மாநில அரசுகளின் எதிர்ப்பு காலப்போக்கில் கடலில் கரைத்த பெருங்காயமாகிவிடும் என்பதால், இந்த அனுமதி கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டது.
''இந்திய விவசாயிகள் இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி விளைபொருட்களுக்கு நல்ல விலை பெற அரசின் இந்த முடிவு வழிவகுக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா.
அமைச்சர் இடைத்தரகர்கள் என்று குறிப்பிடுவது சந்தையிலும் சாலையிலும் சாக்கு விரித்து தானியங்களை விற்கும் வியாபாரிகளையும் சிறு, குறு மளிகைக் கடைக்காரர்களையும்தான். விவசாயிகளிடத்தில் இருந்து மக்களிடத்தில் பொருட்களைக் கொண்டுசெல்லும் சிறு வியாபாரிகளை இடைத்தரகர்கள் என்று குறிப்பிடுவது முதலாளித்துவச் சொல்லாடல். அமைச்சர் அதைத்தான் பின்பற்றி இருக்கிறார். சரி, இந்த இடைத்தரகர்கள் இல்லை என்றால், எப்படி விவசாயிகளிடத்தில் இருந்து விளைபொருட்கள் மக்களை வந்தடையும்? அந்தச் 'சேவை’க்குத்தான் பன்னாட்டுப் பெருவணிக அங்காடிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறது அரசு.
இந்திய அரசு இந்த முடிவை எடுத்த அடுத்த நொடி, இதை வரவேற்று அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் 'வால்மார்ட் இன்டர்நேஷனல்’ நிறுவனத்தின் தலைவரும் முதன்மைச் செயல் அதிகாரியுமான டோ மேக்மில்லன். '' 'வால்மார்ட்’ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவுக்குச் சேவையாற்ற இந்த முடிவு வழிவகுக்கும்'' என்று அவர் கூறியிருக்கிறார்.
இந்த நிறுவனங்கள் என்ன 'சேவை’ செய்யும்? விவசாயிகளுடன் நேரடி ஒப்பந்தம் இடும். அவர்களுக்கு இடுபொருட்கள் தரும். கடன் அளிக்கும். விளைபொருட்களை நேரடியாகக் கொள்முதல் செய்து, சந்தை விலையைக் காட்டிலும் குறைவான விலையில் தங்கள் அங்காடிகளில் விற்கும். இது ஆரம்பம்.
முடிவு எப்படி இருக்கும்? விவசாயிகள் கடன் வாங்குவார்கள். விளைச்சல் பொய்க்கும்போது வாங்கிய கடனுக்கு நிலத்தைப் பெறுநிறுவனங்களிடமே ஒப்படைப்பார்கள். இதற்கிடையில், பெருநிறுவனங்களின் விலையுடன் போட்டியிட முடியாமல் சிறு வியாபாரிகள் தொழிலில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஒருகட்டத்தில் பெருநிறுவனங்கள் நிர்ணயிப்பதே விலை என்று ஆகும். விவசாயிகளும் வெளியே விற்க முடியாது. மக்களும் வெளியே வாங்க முடியாது. நல்ல தரமான பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும். இப்போது குப்பை டீ கிடைப்பதுபோல, குப்பை உணவு மட்டுமே நமக்குக் கிடைக்கும். சில்லறை வர்த்தகம் பெருநிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தின் கீழ் வரும். இப்போது பெட்ரோலிய நிறுவனங்களால் பெட்ரோல் விலை தீர்மானிக்கப்படுவதுபோல, இனி எல்லாப் பொருட்களின் விலைகளும் இந்தப் பெருநிறுவனங்களால் தீர்மானிக்கப்படும். இந்தியச் சந்தைகள் மைதானங்களாகும். இந்திய விவசாயிகளும் வியாபாரிகளும் கூலித் தொழிலாளர் வர்க்கமாக மாறிப்போவார்கள்.

Wednesday, November 23, 2011

KVIC விவசாய லோன்கள்

KVIC  (மத்திய அரசின் கதர் கிராமத்தொழில்கள் ஆணையம்)  விவசாய லோன்கள்  

KVIC அமைப்பு  கிராமபுற வேலை வாய்ப்புகளை  அதிகபடுத்த  மற்றும்  சிறு தொழில் செய்வோரை மேலும்  மேலும் ஊக்குவிக்க பல்வேறு விதமான கடன்களை வழங்குகிறது.அதிகபட்சமாக 30% மானியத்துடன் 25 லட்சம் வரை கடன் பெற இயலும்.ஆனால் செய்யப்படும் தொழில்கள் KVIC அங்கிகாரம் பெற்ற தொழில்களாக இருக்க வேண்டும். நீங்கள்  செய்கிற தொழில் கிழே கொடுக்கபட்டுள்ள அட்டவணையில் உள்ள ஒன்றாக இருக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் KVIC மூலம் கடன் பெற்று "பிளாஸ்டர் ஆப் பாரிஸ்" செய்து வருகிறார். கடன் பெறுவது தொடர்பாக ஏதவாது உதவி வேண்டும் என்றால் இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும் . 9659210289


விவசாயம் சார்ந்த தொழில்கள்
--------------------------------------------
தேனீ வளர்த்தல்,கத்தாழை வளர்த்தல்,பசை, பிசின் தயாரித்தல்,அரக்குத் தயாரித்தல்,மூங்கில் கூடை செய்தல்,விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்,வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்,போட்டோ பிரேம்
நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்,இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்,வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்


தாதுப் பொருள்கள் சார்புத் தொழில்கள் பற்றிய அட்டவணை
---------------------------------------------------------------------------------------------------------------

1. மண்பாண்டம் தயாரித்தல்
2. கிளிஞ்சல் மற்றும் சுண்ணாம்பு
3. கல்வெட்டுதல், ஜல்லி அரைத்தல், செதுக்குதல் (கட்டிடம் மற்றும் கோயிலுக்கு)
4. கல்லில் செய்யப்படும் பயன்பாட்டுப் பொருட்கள்
5. சிலேட்டு மற்றும் சிலேட்டுப் பென்சில் செய்தல்
6. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல்
7. பாத்திரம் கழுவும் பவுடர்        
8. எரி பொருளாகப் பயன்படும் கரி
9, தங்கம், வெள்ளி மற்றும் விலையுயர்ந்த செயற்கை கற்களால் செய்யப்படும் ஆபரணங்கள்
10.  கோலப்பொடி
11. வளையல்
12. பெயிண்ட், வார்னிஷ், டிஸ்டம்பர் மற்றும் கலர் பொடிகள்
13. கண்ணாடிப் பொம்மைகள்
14. கண்ணாடி அலங்காரத் தொழில்
15. செயற்கை வைரம் கட்டிங்
வனம் சார்ந்த தொழில்கள்
16. தேனீ வளர்த்தல்
17. கத்தாழை வளர்த்தல்
18. பசை, பிசின் தயாரித்தல்
19. அரக்குத் தயாரித்தல்
20. மூங்கில் கூடை செய்தல்,
21. விளக்குமாறு, வெட்டிவேர் தட்டி செய்தல்
22. வன விளை பொருட்கள் சேகரித்தல், பதனிடுதல்
23. போட்டோ பிரேம்
24. நெட்டி வேலை. நெட்டி மாலைகள் செய்தல்
25. இலையினால் செய்யப்படும் கிண்ணங்கள்
26. வனத்திலிருந்து கிடைக்கும் மூலிகைச்செடிகள் சேகரித்தல்
கையால் செய்த  காகிதம் மற்றும் ார்ப்பொருட்கள்
27. கைக்காகிதம்
28. காகிதத்தினால் செய்யப்படும் தட்டு, கிண்ணம் பை மற்றும் அட்டை பெட்டிகள்
29. புத்தக பைண்டிங் கவர், நோட்புக் செய்தல்
30. சணற் பொருட்கள் (நூல் தவிர)
31. கயிறு மற்றும் நார்பொருட்கள்
வேளாண் சார்ந்த உணவுப் பொருட்கள் / சார்புத் தொழில்கள் 
32. அரிசி, பருப்பு மற்றும் தானியங்கள் பதனிடுதல் / மசாலா பவுடர் / அப்பளம் / ரொட்டி பேக்கரி பொருட்கள் செய்தல்
33. இடியாப்பம்
34. சமையல் எண்ணெய் தயாரித்தல்
35. கோதுமை, ரவை தயாரித்தல்
36. சிறிய ரைஸ் மில்
37. பனை பொருட்கள் / பனை வெல்லம்
38. கரும்பு வெல்லம் / கண்டசாரி சர்க்கரை செய்தல்
39. மிட்டாய், தின்பண்டம் தயாரித்தல்
40.  கரும்புச்சாறு செய்தல்
41. கேழ்வரகு, மக்காச்சோளப் பொருட்கள் தயாரித்தல்
42. முந்திரிப்பருப்பு தயாரித்தல்
43. பால்பொருட்கள் தயாரித்தல்
44. மாட்டுத் தீவனம் / கோழித் தீவனம் தயாரித்தல்
பாலிமர் மற்றும் ரசாயண சார்புத் தொழில்கள்
45. தீப்பெட்டி
46. அகர்பத்தி
47. பட்டாசு
48. தோல் பதனிடுதல்
49. சோப்பு தயாரித்தல்
50. ரப்பர் பொருட்கள்
51. ரெக்ஸின்
52. பி.வி.சி. பொருட்கள்
53. கொம்பு, எலும்பு, தந்தப் பொருட்கள்
54. மெழுகுவர்த்தி, சூடம் மற்றும் அரக்கு
55. பிளாஸ்டிக் பொருட்கள்
56. பொட்டு தயாரித்தல்
57. மருதாணி தயாரித்தல்
58. வாசனைத் தைலம் தயாரித்தல்
59. ஷாம்பு தயாரித்தல்
60. ஹேர் ஆயில்
61. டிடர்ஜெண்ட், சலவை பவுடர்
பொறியியல் மற்றும் மரபு சார எரிசக்தி
62. தச்சுவேலை
63. இரும்பு வேலை
64. அலுமினியப் பாத்திரங்கள்
65. சாண எரிவாயு
66. கழிவுப் பொருட்கள் மூலம் இயற்கை உரம் உற்பத்தி செய்தல்
67. பேப்பர் பின், ஸ்டவ் பின், ஊக்கு, கிளிப்புகள் தயாரித்தல்
68. அலங்கார பல்புகள், கண்ணாடிக்குடுவைகள் மற்றும் கண்ணாடி
69. குடை தயாரித்தல்
70. சூரிய ஒளி மற்றும் காற்றினால் இயங்கும் கருவிகள்
71. பித்தளைப் பாத்திரங்கள்
74. பாத்திரம் இல்லாத பித்தளை, செம்பு, வெண்கலப் பொருட்கள்
75. ரேடியோ
76. கேஸட் பிளேயர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்
77. வோல்டேஜ் ஸ்டெபிலைசர்
78. எலக்ட்ரானிக் கடிகாரம் மற்றும் அலாரம் கடிகாரம்
79. கேஸட் ரெக்கார்டர் ரேடியோவுடன்/ரேடியோ இல்லாமல்
80. மரத்தினால் செய்யப்படும் அழகுப் பொருட்கள்
81. தகரப் பொருட்கள்
82. வயர் நெட்
83. இரும்பு கிரில்
84. மோட்டார் வைண்டிங்
85. வண்டி, மாட்டு வண்டி, சிறிய படகுகள் தயாரித்தல், சைக்கிள், சைக்கிள் ரிக்ஷா, மோட்டார் பொருத்தப்பட்ட வண்டிகள் அசெம்பிளிங்
86. இசைக்கருவிகள் தயாரித்தல்
ஜவுளி தொழில் (கதர் நீங்கலாக) மற்றும் பிற தொழில்கள்
87. பாலிவஸ்திரா
88. லோக்வஸ்திரா
89. பனியன்
90. ரெடிமேட் துணிகள் தயாரித்தல் / டெய்லரிங்
91. பொம்மை தயாரித்தல்
92. சாயம் / சாய அச்சுத் தொழில்
93. கம்பளி மற்றும் நூல்கண்டுகள்
94. எம்பிராய்டரி
95. மருத்துவத் துறைக்கானபேண்டேஜ்கள்
96. ஸ்டவ் திரிகள்
97. எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள்
98. லாண்டரி /  சலவையகம்
99. பார்பர் / முடித்திருத்தகம்
100. பிளம்பிங்
101. வீட்டில் பயன்படும் எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதுபார்த்தல்
102. டயர் வல்கனை சிங்
103. பம்ப்செட், டீசல் எஞ்சின் பழுதுபார்த்தல்
104. விவசாயப் பொருட்களுக்கான ஸ்பிரேயர், பூச்சி மருந்து பம்ப்செட்டுகள் பழுதுபார்த்தல்
105. ஒலி, ஒளி அமைப்புகளுக்கான ஒலி பெருக்கி, ஆம்பிளிபையர், மைக் போன்றவை வாடகைக்கு விடுதல்
106. பேட்டரி சார்ஜ் செய்தல்
107. பேனர் / கலைத்தட்டிகள் வரைதல்
108. சைக்கிள் ரிப்பேர் கடை
109. கட்டிட வேலைகள்
110 பேண்ட் வாசிக்கும் குரூப்கள்
111. மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகள் (பைபர் கிளாஸ்)
112. வாடகைக்கு விடப்படும் மோட்டார் சைக்கிள்
113. இசைக்கருவிகள்
114 உணவகம் (மதுபானம் நீங்கலாக)
115. தேனீர் விடுதி
116. அயோடின் கலந்த உப்பு


மேலும் தகவல் பெற http://www.kvic.org.in